தெலுங்கானா தேர்தல் || YSR ஷர்மிளா எடுத்து அதிரடி முடிவு! காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேவேளையில் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை ஷர்மிளா YSRDP கட்சியை தெலங்கானாவில் தொடங்கி தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். ஆனால் சந்திரசேகர ராவுக்கு எதிராக ஷர்மிளாவால் அரசியல் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் கூட்டணி அல்லது காங்கிரசில் இணைவது என முடிவு செய்த டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.  அனால் காங்கிரஸ் கட்சி அவரை கண்டு கொள்ளவே இல்லை. அக்டோபர் 1க்குள் நிலைப்பாட்டை தெறிவிக்க ஷர்மிளா கெடு விதித்தும் காங்கிரஸ் மவுனம் காத்தது.

இந்நிலையில் 5 மாநில  சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தெலங்கானாவுக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக ஷர்மிளாவுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் தெலுங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தெலுங்கான சட்டமன்ற பொது தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் ஷர்மிளா அதிரடியாக அறிவித்து இருப்பது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பி.ஆர்.ஸ், ஒய்.ஆர்.எஸ்.டி.பி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yrs sharmila announced solo contest in Telangana elections


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->