காங்கிரசில் ஐக்கியமானார் ஒய்.எஸ்.ஷர்மிளா.!
YS Sharmila joined Congress
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை நடத்தி வரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 3ம் தேதி ஒய்.எஸ்.ஷர்மிளா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். ஒரு பணக்கார மாநிலம் பெரும் ஊழலால் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.அதன் தொடர்ச்சியாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா தனது கட்சியை ஜனவரி 4ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
English Summary
YS Sharmila joined Congress