வேட்பு மனு தாக்கல் செய்தார் ஷர்மிளா.!! எந்த தொகுதி தெரியுமா?
YSR Sharmila submit nomination in Kadapa
தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த சூழலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்மிளா அக்கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் கடப்பா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்துள்ளார். ஆந்திராவில் தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவே ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
YSR Sharmila submit nomination in Kadapa