உனக்கு 65 எனக்கு 71: முதியோர் இல்லத்தில் மலர்ந்த இளம் காதல்! குவியும் வாழ்த்து! - Seithipunal
Seithipunal



அசாமின் கவுகாத்தியில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் தம்பதியினர் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. 

கோலாகட்டைச் சேர்ந்த 71 வயதான பத்மேஸ்வர் கோலா, இரு சகோதரர்களையும் இழந்த பிறகு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார். சோனித்பூரைச் சேர்ந்த 65 வயதான ஜெயபிரபாவும் அதேபோல் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் சந்தித்தனர். பாடகரான பத்மேஸ்வரரின் குரலில் மயங்கிய ஜெயபிரபா அவருடன் காதல் கொண்டார். இவர்களின் காதலை அறிந்த முதியோர் இல்லத்தினர் திருமண ஏற்பாடு செய்தனர். மோனாலிசா சொசைட்டி என்ற தொண்டு நிறுவனம் அசாமிய பாரம்பரிய முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தது.

சுமார் 4,000 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்தத் திருமணத்திற்கு பொது நிதி உதவியும் கிடைத்தது என தொண்டு நிறுவன நிர்வாகி உத்பால் ஹர்சவர்தன் தெரிவித்தார். முதிய வயதிலும் மலர்ந்த இந்த காதல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asam old love story


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->