மொத்தம் 15 நாள்! ரோஜா தினம், காதலர் தினம், பிரியும் தினம்! மொத்த லிஸ்டும் இதோ!
Lovers day
காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 7 முதல் 21 வரை காதலர்கள் என்னென்ன செய்ய வேண்டும், அந்த ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு என்ன? எப்படி கொண்டாடுவது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்!
பிப்-7: ரோஜா தினம் - காதலர்கள் தங்களது அன்பை ரோஜாக்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
பிப்-8: காதலைத் தெரிவிக்கும் நாள் - காதலர்கள் தங்களது காதலை "ஐ லவ் யூ" என்று வெளிப்படுத்துகின்றனர்.
பிப்-9: சாக்லேட் தினம் - காதலர்கள் தங்களது அன்புக்கு சாக்லேட்டுகளை பரிசளிக்கின்றனர்.
பிப்-10: டெடி தினம் - காதலர்கள் டெடி பியர் பொம்மைகளை பரிசளித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பிப்-11: வாக்குறுதி தினம் - காதலர்கள் ஒருவருக்கொருவர் பிரியமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்.
பிப்-12: கட்டியணைக்கும் தினம் - காதலர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பிப்-13: முத்த தினம் - காதலர்கள் முத்தமிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
பிப்-14: காதலர் தினம் - காதலர்கள் வெளியில் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
பிப்-15: கன்னத்தில் அறையும் தினம் - காதலர்கள் சண்டையிட்டு ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொள்கின்றனர்.
பிப்-16: அடித்துக்கொள்ளும் தினம் - காதலர்கள் கோபத்தில் ஒருவரையொருவர் அடித்து கொள்ள வேண்டுமாம்.
பிப்-17: வாசனை தினம் - காதலர்கள் ஒருவருக்கொருவர் வாசனை திரவியங்களை பரிசளிக்கின்றனர்.
பிப்-18: காதல் தினம் - காதலர்கள் சண்டைகளை மறந்து மீண்டும் ஒன்று சேர்கின்றனர்.
பிப்-19: மன்னிப்பு தினம் - காதலர்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றனர்.
பிப்-20: மாயமாகும் தினம் - காதலர்கள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அவரவர் வழியே செல்கின்றனர்.
பிப்-21: பிரியும் தினம் - காதலர்கள் ஒருவரையொருவர் பிரிகின்றனர்.