நாடக காதலன் பார்த்து இருப்பிங்க, வாடகை காதலன் பற்றி தெரியுமா? ஒரு வினோத நடைமுறையில் வியட்நாம் பெண்கள்! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் கொடுக்கும் திருமண அழுத்தத்தை சமாளிக்க வியட்நாமில் புதுமையான ஒரு நடைமுறை உருவாகியுள்ளது. 

அந்நாட்டு இளம்பெண்கள் தற்காலிகமாக பெற்றோர்களை சமாதானப்படுத்த, காதலனை வாடகைக்கு எடுத்து தங்களின் மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர்.

திருமண வயதை எட்டிய பல பெண்கள் பெற்றோர் தொடரும் வற்புறுத்தலுக்கு அமைதியான முறையில் பதிலளிக்க, இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். 

வடக்கு வியட்நாமில் உள்ள 30 வயதான பெண் ஒருவர், பெற்றோரின் கட்டாயத்தால் "காதலனை" வீட்டிற்கு அழைத்து வர வாடகை முறையைப் பயன்படுத்திய பிறகு, இந்த நடைமுறை மற்ற பெண்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

வாடகை காதலன் வேலை செய்யும் 25 வயதான நபர், இது தன் முழுநேர வேலையாக மாறியதாகவும், இதற்காக அவர் பல புதிய திறன்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கிறார். 

குறிப்பாக, ஜிம்மில் பயிற்சி, சமையல் கற்றல், பாடும் திறன் மற்றும் உரையாடல் திறனை மேம்படுத்தி, தோற்றத்தையும் நடத்தை நிலையையும் தகுந்தபடி பராமரிப்பதாகவும் வாடகை காதலன்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு, தற்காலிகமாக பெற்றோரின் எதிர்பார்ப்புகளை சமாளிக்க இவ்வினோத நடைமுறை அந்நாடு முழுவதும் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viyatnam Rent Lover


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->