சக்கரம்ன்னா வட்டமா தானே இருக்கும்.?! இது தினுசா இருக்கே.?! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


சக்கரம் என்றாலே வட்ட வடிவில் இருக்கும் என்று தான் நாம் அறிந்திருக்கிறோம் கேள்விப்பட்டிருக்கிறோம். மாறிவரும் நவீன அறிவியலின் வளர்ச்சியில் சதுர வடிவிலான சக்கரங்களை சைக்கிளிற்கு உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் விஞ்ஞானி ஒருவர்.

தி க்யூ என்னும் யூட்யூப் சேனலைச் சார்ந்த செர்ஜி கோர்டிஐஏவ் என்ற விஞ்ஞானி சதுர டயரில் இயங்கும் சைக்கிளை தயாரித்து சாதனை படைத்திருக்கிறார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அனைத்து மக்களையும் ஆச்சரியமடைய செய்திருக்கிறது.

சதுர வடிவிலான சக்கரம் சுற்றுவது சாத்தியமில்லை என்றாலும் மிகவும் வெற்றிகரமாக வடிவமைத்திருக்கிறார் பொறியாளர் செர்ஜி. இவர் உருவாக்கி இருக்கும் சதுர சக்கரம் வட்ட வடிவ சக்கரம் போன்று சுற்றுவதாக இல்லை. ஒரு சதுரமான சட்டத்தை உருவாக்கி அதனை சுற்றும் படி மாற்றியமைத்திருக்கிறார். அதில் இருக்கக்கூடிய பெல்ட் மட்டுமே செல்கிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பல்வேறு மக்களும் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி வருகின்றனர். இதுவரைக்கும் வட்டமாகவே பார்த்த சக்கரம் தற்போது சதுரமாக சுழலுவதை மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த சதுர சக்கர சைக்கிள் தான் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A square shaped bicycle wheel that has gone viral on social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->