இந்தியாவில் ட்ரெண்டாகும் #திராவிடியா_பசங்க! காரணம் என்ன?
Actor kasturi tweet going to viral with hashtag
தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள், ஒரு நாள் பட்டாசு விதித்தால் காற்றுமாசு உயர்ந்துவிடாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் சிவகாசியில் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்போம் என செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.
இதனை நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், "பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? "விடுமுறை நாள்"னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான்" என திராவிட சித்தாந்தம் கொண்டவர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு திமுக மகளிர் அணி நிர்வாகி "பொது வெளியில் கொஞ்சம் கண்ணியமான வார்த்தைகள் பேசுங்கள்" என அறிவுரை கூற, அதற்க்கு நடிகை கஸ்தூரி, "திராவிடியம் கண்ணியமற்ற விஷயம் என்று உங்களுக்கும் புரிந்து விட்டதா ? நன்று. தினம்தோறும் என்னை உங்கள் கட்சி மற்றும் மத பற்றாளர்கள் தூற்றும் போது கண்ணியம் ஒரு பொருட்டாக படவில்லையா? நூலிபன் என்று சொன்னவர்களுக்கு கண்ணியம் நாகரிகம் குறைந்தபட்சம் மனசாட்சி...?" என அவரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த பதிவிற்கு திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் எதிராகவும் , பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் திமுகவின் உடன்பிறப்புகள் கஸ்தூரியை அநாகரிகமான வார்த்தைகளில் பேசியும் வருகின்றனர். இந்த நிலையில் கஸ்தூரி குறிப்பிட்ட #திராவிடியா_பசங்க என்ற வார்த்தை தற்பொழுது ட்விட்டரில் இந்தியாவில் ட்ரெண்டாகி ஆகி வருகிறது. இந்த வார்த்தையை வைத்து பாஜகவினர் அதிகளவு கருத்துக்களை பகிர்ந்து வருவதால் இந்திய அளவு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
English Summary
Actor kasturi tweet going to viral with hashtag