"வாழ்க்கையில் பொறுமை முக்கியம்" கரடி வீடியோவை ட்வீட் செய்து கருத்து சொன்ன தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா.!
anand mahindra retweeted video becomes viral
எந்த ஒரு செயலுக்கும் முயற்சிக்கும் தியானமும் பொறுமையும் அவசியம் என்பதை ட்விட்டரில் ஒரு கரடி வீடியோவின் மூலம் சொல்லி இருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
எதிலும் கவனம் செலுத்துவது ஒரு சவாலான காரியம் ஆனால் அந்த சவாலை சமாளித்து விட்டால் வெற்றி நிச்சயம் தான் என்பதற்கு ஆனந்த் மகேந்திரா பகிர்ந்திருக்கும் அந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
தியானம் மற்றும் பொறுமை வெற்றிக்கான செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற தலைப்புடன் அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் கரடி ஒன்று ஆற்றின் கரையில் பொறுமையாக அமர்ந்திருக்கிறது. தனது இரைக்காக அது பொறுமையாக காத்திருக்கிறது அந்த இரையை பிடிப்பதற்கான நேரம் வந்ததும் வேகமாக தண்ணீருக்குள் கையை விட்டு மீனை பிடிக்கிறது. இந்த வீடியோவானது பொறுமைக்கும் தியானத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
டெரிஃபைங் நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் முதலில் பகிரப்பட்ட இந்த வீடியோவை மறுபகிர்வு செய்து இருக்கிறார் ஆனந்த் மகேந்திரா. தற்போது இந்த பதிவு 20 லட்சம் பகிர்வுகளையும் கடந்து வைரலாகி இருக்கிறது.
English Summary
anand mahindra retweeted video becomes viral