திமுகவிற்கே இந்த நிலைமையா?! விடாமல் அடிக்கும் மர்ம நபர்கள்! திக்குமுக்காடிப்போன திமுக! வெளியான பரபரப்பான தகவல்!
dmk complaint against social media rumors creators
“திமுக மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரோ அல்லது தலைமைக் கழகமோ எவ்வித அறிவிப்பும் - ஆர்ப்பாட்டமும் - போராட்டமும் அறிவிக்காத நிலையில், தி.மு.கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் - அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சமூகவலைதளங்களில் ஒன்றான "வாட்ஸ்அப்"-பில் தன்னிச்சையாக வேண்டுமென்றே பொய்ச் செய்தி ஒன்றினை உலாவிட்டு வருகின்றனர் சில விஷமிகள்.
![](https://img.seithipunal.com/media/RS Bharathi MP-yuxzr.jpg)
தி.மு.கழகத்தின் வளர்ச்சியையும் - எழுச்சியையும் கண்டு பொறாமையின் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழக மக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப்-பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் பொய்ச்செய்தினை வெளியிட்டவர்மீது நடவடிக்கை எடுத்திட காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு பொய்ச் செய்தியினை வதந்தியாக பரப்புவர்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தி.மு.கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்" என ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., தெரிவித்துள்ளார்.
திமுக போன்ற பலமான பாரம்பரியமிக்க கட்சிக்கு என தனியாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மட்டும் அல்லது ஆதரவு ஊடகங்கள் எண்ணற்றவை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதேபோல திமுகவிற்கு சமூக வலைத்தளங்களில் பலமான ஐடி விங் குழுவும் இல்லது. இவையெல்லாம் இருந்தும் சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் தயாரித்து வெளியிட்டு வரும் செய்திகளை சமாளிக்க முடியாமல் திணறி, திக்குமுக்காடி வருகிறார்கள்.
English Summary
dmk complaint against social media rumors creators