போராட்டம் தொடரும்.. "Say No To Drugs & DMK".. எடப்பாடி பழனிச்சாமியின் புதிய அவதாரம்.!!
EPS added Twitter handle name Say No To Drugs DMK
தமிழ்நாட்டில் போதை பொருள் விளக்கம் அதிகரித்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்சி வரும் நிலையில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அதிமுக தரப்பு முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். தனது பெயருடன் "Say No To Drugs & DMK" இணைத்ததோடு அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,
வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது. கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS added Twitter handle name Say No To Drugs DMK