தமிழக ராணுவ வீரர் கதறல் வீடியோ! அரை நிர்வாணமாக்கி மனைவியை தாக்கியதாக போலீசில் புகார்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதி அருகே படவேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி கீர்த்தி அதே ஊரில் பேன்ஸி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அந்த கடையை காலி செய்ய சொல்லி சிலபேர் தன்னுடைய மனைவியை தாக்கியதாக கூறினார். தாக்கியவரின் பெயர் ராமு என்று விசாரித்ததில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோவாக பதிவு செய்த ராணுவ வீரர் , ஜம்மு காஷ்மீரில் இருந்து அந்த வீடியோ மூலம் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்ததாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு என்ற கிராமத்தில் பெண்களுக்கான பேன்சி கடை வைத்துள்ள எனது மனைவியை ஆடைகளை கிழித்து அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்கள். சுமார் 120 பேர் கூட்டமாக வந்து எங்கள் கடையை உடைத்து நாசமாக்கியதோடு, என் மனைவியையும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,க்கு எழுத்து பூர்வமான புகார் அனுப்பியுள்ளேன். எல்லைக்கு உட்பட்ட எந்த காவல் நிலையத்திலும் ஆக்சன் எடுக்கவில்லை. குடும்பத்தினரை காப்பாற்றுங்கள் என மண்டியிட்டு ராணுவ வீரர் வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இதில் அவரது மனைவி கீர்த்தி பிரச்சினை செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையில் கை கலப்பு ஏற்பட்டது என போலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Army Soldiers Wife Attacked by someone


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->