தமிழ்நாட்டில் யாருக்குமே கிடைக்காத பெருமை.. கனிமொழிக்கு.. மிகப்பெரிய அங்கீகாரம்.!
Kanimozhi Karunanidhi became the first politically recognized leader in Tamil Nadu
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதிக்கு தமிழ்நாட்டில் முதல்முறையாக கிரே குறியீட்டை வழங்கியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
இதற்கு முன்பு ட்விட்டர் சமூக வலைதளத்தில் நடிகர், நடிகைகள், செலிப்ரட்டிகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என இருப்பவர்களுக்கு நீல நிற குறியீடு வழங்கி வந்தது.
இலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக சமூக பணிகள் மற்றும் பிரபலமானவர்களுக்கு வழங்கி வந்த நீல நிற குறியீடு தற்போது கிரே நீலம் மற்றும் தங்க நிற குறியீடுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அரசு மற்றும் பன்னாட்டு தலைவர்களுக்கு கிரே நிற குறியீடு ட்விட்டர் சமூக வலைதளத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற எம்பி யின் விடுதலை மற்றும் பெண்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வருபவருமான கனிமொழி கருணாநிதிக்கு கிரே குறியீடை வழங்கி இருக்கிறது ட்விட்டர். இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக கிரே குறியீடு பெற்ற அரசியல் தலைவராக பதிவாகி இருக்கிறார் கனிமொழி.
English Summary
Kanimozhi Karunanidhi became the first politically recognized leader in Tamil Nadu