அரே பையா எனக்கு எப்போ 93 ஆயிரத்தை கொடுப்ப..! மோடியை கதறவிடும் வாட்சப் வைரல்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதம வேட்பாளராக முடிவு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து., இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

தற்போது நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்று தற்போது 4 மாதகாலங்களில் அவரது ஆட்சிக்காலம் நிறைவு பெரும் நிலையில்., இன்னும் வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணமானது வெளிவந்ததாக தகவல் கிடைக்கவில்லை. இந்த பிரச்சனைக்கு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

இந்த பிரச்சனை குறித்து அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பாரதிய ஜனதா கட்சியினரிடம் கேள்விகளை கேட்டால் சமாளிப்பது எப்படி என்று பெரும்பாலானோருக்கு கற்று தருவது போல பதிலளித்து வருகின்றனர். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த போது நெட்டிசன்களும் தங்களது திறமையால் பல மீம்களை தயாரித்து இணையத்தில் உலா வர செய்தனர். 

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் உலா வரும் வாட்சப் செய்தியின் ஒரு தொகுப்பையே இந்த செய்தியில் காணப்போகிறோம். இந்த செய்தி தொகுப்பானது எந்த ஒரு உள்நோக்கத்துடனும் இயற்றப்படவில்லை., கற்பனையான உரையாடலை கொண்டு மட்டுமே வைரலாகிறது. 

யாரோ: மோடி ஜி நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வழங்குகிறேன் என்று கூறிய ரூ.15 இலட்சம்., எப்போது வழங்குவீர்கள். 

மோடி ஜி: அந்த ரூ.15 இலட்சத்திற்கு பதிலகத்தான் அனைவருக்கும் ஜியோ சிம் கார்ட் கொடுத்தாச்சே., இப்போது என்ன ரூ.15 இலட்சம். 

யாரோ: என்ன ஜி சொல்றீங்க?. ஜியோ சிம்மிற்கும்., இந்த ரூ.15 இலட்சத்திற்கும் என்ன சம்மந்தம்?.

மோடி ஜி: சொல்கிறேன் பையா... எங்களது ஆட்சிக்கு முன்னதாக செல்போனுக்கான 1 ஜி.பி டேட்டா எவ்வுளவு ரூபாய்க்கு வாங்கினீர்கள்?

யாரோ: ரூ.300 க்கு ஜி.

மோடி ஜி: தற்போது எவ்வுளவு ரூபாய்க்கு வாங்குறீங்க?.

யாரோ; ரூ.5 க்கு ஜி. 

மோடி ஜி: பையா... இப்போ 1 ஜி.பி டேட்டாவிற்கு எவ்வுளவு சேமிப்பு? 

யாரோ: ரூ.295 ஜி. 

மோடி ஜி: இப்போதான் பையா நீங்க நல்ல புரிஞ்சுக்கிடனும்., ஒரு மாதத்துல மொத்தம் 30 ஜி.பி நெட் யூஸ் பண்றீங்க. ஒரு நாளைக்கு ஒரு ஜி.பி வீதம் சேமிப்பு கணக்கு பண்ணுங்க.

யாரோ: நாட்கள் 30 X ரூ.295 = ரூ.8850 ஜி. 

மோடி ஜி: கரெக்ட்..! இப்போ அப்படியே ஒரு குடும்பத்துல சுமாராக 3 பேர் நெட் உபயோகம் செய்யிறாங்க., அப்போ குடும்பத்தோட மாத சேமிப்பு எவ்வ்ளவு?.

யாரோ: ரூ.8850 X நபர்கள் 3 = ரூ.26550 ஜி.

மோடி ஜி: சூப்பர் பையா. அப்படியே ஒரு வருசத்துக்கு எவ்வுளவு ரூபாய் ஆகுது?.

யாரோ: ரூ.26550 X 12 மாதம் = ரூ.3 இலட்சத்து 18 ஆயிரத்து 600 ஜி. 

மோடி ஜி: வொன்டெர்புல் பையா. அப்டின்னா எங்களோட ஆட்சி 5 வருடம் நடக்குது., எங்களது ஆட்சியில சேமிப்பு எவ்வுளவு?.

யாரோ: ரூ.3186000 X 5 வருடங்கள் = ரூ.15 இலட்சத்து 93 ஆயிரம் ஜி.

மோடி ஜி: இப்போ சொல்லுங்க பையா., நான் கொடுத்த ரூ.15 இலட்சத்துல இருக்குற மீதி பணம் ரூ.93 ஆயிரத்தை எப்போ எங்களுக்கு திருப்பி தருவீங்க....

யாரோ: அது...ஜி... (நோ கமெண்ட்ஸ்) நாங்கல்லாம் அப்படியே எஸ்ஆகிடுவோம்ல... 

மோடி ஜி: இனிமேல் யாராவது ரூ.15 இலட்சத்தை கேட்டா ரூ.93 ஆயிரத்தை கெட்ட சொல்லுங்க...  

இந்த மேற்கண்ட உரையாடல் தான் தற்போது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MODI DEPOSIT 15 LAKH WHATS APP TRENDING


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->