இந்தியாவில் ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு மாத சந்தா கட்டணம் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல்‌போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த செயலிகளுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர். அந்த வகையில் தங்களின் பயனாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் மாத கட்டண சந்தா நடைமுறையான மெட்டா வெரிஃபைட் பயன்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மாத கட்டணம் செலுத்தி தங்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை வெரிஃபைட் கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த புதிய அறிவிப்பால் ஏற்கனவே உள்ள வெரிஃபைட் செய்யப்பட்ட கணக்குகளில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து கட்டணம் இன்றி தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பயனர்கள் வெப் பிரவுசர்களில் மெட்டா வெரிஃபைட் பயன்பாட்டுக்கான மாத கட்டணம் ரூ.599 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பயன்பாட்டுக்கு மாத கட்டணம் ரூ.699 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளது மெட்டா நிறுவனம். அந்த வகையிலான பயனர்களுக்கு மட்டுமே வெரிஃபைட் பயன்பாடு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி 18 வயது விரும்பியவர்கள் மற்றும் அரசு வழங்கிய புகைப்பட அடையாள சான்றிதழும் இதற்கு அவசியம். குறிப்பாக பயனரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பெயருடன் அடையாள அட்டையில் உள்ள பெயர் பொருந்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெரிஃபைடு கணக்கு மூலம் பயனர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு பரவலாக ரீச் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monthly payment Verified meta account introduce in India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->