இனி வாட்ஸ் அப் மூலம் ஷாப்பிங்.. அசத்தல் அப்டேட்!
New update for WhatsApp shopping
உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது.
இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்.
அதனால் இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனிநபர் மட்டுமல்லாமல் குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புது புது வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் மூலமாக மளிகை பொருட்கள் அறிமுகம் செய்யும் வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த வணிகத்தை தொடங்க உள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பார்க் அறிவித்துள்ளார். வாட்ஸ்அப் பிசினஸ் வசதியோடு இல்லாமல் சாட் செய்வதன் மூலமாகவே ஷாப்பிங் செய்ய வசதியாக இது இருக்கும் என்று மார்க் சூக்கர்பார்க் தெரிவித்துள்ளார்.
English Summary
New update for WhatsApp shopping