#வீடியோ: 'நாய் நுழைவதை போல நுழைந்தேன்' கஞ்சா ஆசாமியின் கவிதைத்துவமான வாக்குமூலம்.!
people video viral who using weed
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது வீடியோக்கள் திடீரென்று வைரலாவது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். அதிலும் சில வழக்குகளில் கைதாகும் நபர்கள் வாக்குமூலம் அளிப்பதை காவல்துறையினர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.
அவர்களது வாக்கு மூலம் மிகவும் நகைச்சுவை நிறைந்ததாகவும் அல்லது வித்தியாசமானதாகவும் இருக்கும் பட்சத்தில் சமூக வலைதளங்களில் அது மிகப்பெரிய வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வீடியோ பதிவிட்ட சமூகவலைத்தள பக்கத்தில் அது தேனி மாவட்ட காவல்துறையினர் விசாரணையின் பொழுது எடுத்த வீடியோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்த தகவல் எதுவும் இல்லை.
அதில் பைக்கை திருடிய ஒரு திருடன் கஞ்சா அடித்து விட்டு போலீசிடம் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளிக்கிறார். அத்துடன் கவிதை கூறுவதுபோல பல உருவகங்களை ஒப்பிட்டு தான் செய்த குற்றத்திற்கு அவர் விளக்கம் அளிப்பதை காண மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இது போலீசாருக்கு கூட சிரிப்பை தரும் விஷயமாகவுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
people video viral who using weed