சென்னை பேருந்திற்குள் ரெயின்! சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


மழை நீர் ஒழுகியதால் மக்கள் நின்றபடி பயணம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழக முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலானோர் அரசு பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் குரோம்பேட்டையிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை செல்லக்கூடிய 21ஜி மாநகர அரசு பேருந்தில் இடது புறம் முழுவதுமாக மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அனைத்து இருக்கைகள் மேலும் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் உட்கார முடியாமல் நின்றபடியே பயணம் செய்து வருகின்றனர். 

பயணிகள் நின்றபடியே பயணம் செய்வதால் பேருந்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேருந்துகளில் உள்ள ஓட்டைகளை அடைத்து மழைநீர் ஒழுகாத வண்ணம் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rain in the Chennai bus viral video on social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->