உண்மையான டாக்டரா! அல்லது வசூல்ராஜா மாதிரி திராவிட மாடலா? Dr.ஷர்மிளாவை கலாய்த்த கஸ்தூரி! - Seithipunal
Seithipunal


நேற்றைய தினம் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகள் குறித்து இழிவாக பேசிய வீடியோ வைரலானது. திமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை வைத்துக்கொண்டே சைதை சாதி பேசியது பெரும் சர்ச்சை உண்டாக்கியது. அந்த பேச்சில் குறிப்பாக தமிழ் திரைப்பட நடிகைகளாக இருந்து தற்போது பாஜக நிர்வாகிகளாக இருக்கும் பெண்களை இழிவாக பேசியிருந்தார். 

இதற்கு குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆண்கள் பெண்களை தவறாக பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது. அவர்கள் வளர்ந்த மோசமான சூழலை காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள் இது போன்ற ஆண்கள் தங்களை கலைஞர் பின்பற்றுவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் இதுதான் திராவிட மாடலா? என கனிமொழியை குறிப்பிட்டு கேள்வி எழுப்ப இருந்தார்.

இதற்கு கனிமொழி "ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் எனது கட்சி திராவிட முன்னேற்ற கழகமும் இத்தகைய செயல்களை மன்னிக்காது. என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடிகிறது" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பலதரப்பட்ட மக்களும் இணையதள வாசிகளும் வரவேற்பு தெரிவித்தனர். நடிகை குஷ்புவும் நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விசிக ஆதரவாளரும் டாக்டருமான ஷர்மிளா "அந்த பேச்சு கண்டியத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது. இருப்பினும் நீங்கள் தொடங்கி வைத்த #திராவிடியா_பசங்க என்ற ஹேஷ்டேகை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த டேகை சங்கிக் குழு ட்ரென்ட் செய்து வருகின்றனர். அவர்களால் தொடங்கப்பட்ட #திராவிடியா_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உள்ள கருத்துக்களை ஈர்க்க விரும்புகிறேன். நீங்கள் அதை கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என மறைமுகமாக கஸ்தூரியை சாடி இருந்தார்.

இதற்கு கஸ்தூரி நேரடியாகவே " மன்னித்தல்(Condone) என்பது ஏற்றுக்கொள்வது ஊக்குவிப்பது எனப் பொருள். கண்டனம் (Condemn) என்பது எதிர்ப்பு என்று பொருள். கடவுளின் நன்றி இவர் காண்டம் என்று எழுதவில்லை. இவர் உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிடம் மாடலா எதுவாக இருந்தாலும் திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி" என ஷர்மிளாவை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார். 

பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகள் பற்றி பேசியதற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டதோடு அவர்களுடைய விவாதம் முடிந்து விட்டது. ஆனால் கஸ்தூரி மற்றும் ஷர்மிளா புதிய பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் ட்விட்டரில் இரு தரப்பினரும் மல்லு கட்டிக்கொண்டு ரிப்ளை கொடுத்து வருகின்றனர். கஸ்தூரியின் கருத்துக்கு ஷர்மிளா எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sharmila was real doctor Or the Dravidian model like Vasulraja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->