தந்தையை கட்டிப்பிடித்து அழுத மணப்பெண்... ஆறுதல் சொல்ல வந்த அம்மா... மகள் சொன்ன வார்த்தை.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தற்போது எல்லாமே இணையதளமையமாகி வருகிறது. நம்முடைய உணர்வுகள்  சுக துக்கங்கள் எல்லாவற்றையும்  இணையதளங்களில் பகிர்ந்துவரும் பழக்கம் கொரோனா காலத்திற்குப் பின் அதிகமாகி இருக்கிறது.

தற்காலங்களில் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வருகையால் ரீல்ஸ் மோகம் இளைய தலைமுறையினரிடம் அதிகமாக இருக்கிறது. இது சில நேரங்களில் எதார்த்தத்தையும் தாண்டி செயற்கை தனமான ஒரு உலகிற்கு மக்களை அழைத்துச் செல்கிறது.

தற்போது ஒரு திருமண வீட்டில் எடுக்கப்பட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணப்பெண் தன் தாயிடம் கூறிய வார்த்தை தான் அந்த வீடியோ வைரலாவதற்கு  காரணமாக இருந்திருக்கிறது.

அந்த வீடியோவில் மணப்பெண் திருமணம் முடிந்த கையோடு தனது தந்தையை கட்டிப்பிடித்து அழுகிறார். தாயும் மணமகளை கட்டிப்பிடிக்க வரும்போது அம்மா ரீல்ஸ் ஓடுகிறது என தன் தாயிடம் கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த  இணையதள வாசிகள் அந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the video of bride tell her mom to not intervene in her nsta reels goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->