பேட்டி கொடுத்த இளம்பெண்ணின் அனுமதியின்றி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் - 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தனியார் யூடியூப் சேனலில் பணியாற்றிய ஸ்வேதா என்பவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் மாலில் காதல் குறித்து இளைஞர் மற்றும் இளம் பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது, அவர் இளம் பெண் ஒருவரிடம் காதல் குறித்து பேசுமாறு கேட்டுவிட்டு, பின் ஆபாசமாக கேள்வி கேட்டுள்ளனர். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது வீடியோவை யூடியூப் பக்கம் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், தங்கள் அனுமதியின்றி வீடியோவை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என கூறியதன் பேரில் வீடியோவை அழிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். 

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பேட்டி கொடுத்த இளம்பெண்ணின் அனுமதி இல்லாமல் ஆபாசமாக கேள்வி கேட்ட வீடியோவை தங்களது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தத் தகவலை தோழிகள் மூலம் அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து வீடியோவை பார்த்தபோது, ஏராளமானோர் அவதூறு கருத்துகளால் கமெண்ட் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி உள்ளார். இதையறிந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இளம்பெண் அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் ராம், யோகராஜ் யூடியூப் VJ ஸ்வேதா ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrest for vedio published in you tube without permission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->