45வது ஆண்டில் வன்னியர் சங்கம்! ட்ரெண்டாகும் #45yearsofvanniyarsangam ஹேஷ்டேக்! - Seithipunal
Seithipunal


வன்னியர் சங்கம் 44ம் ஆண்டை நிறைவு செய்து 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்தியிருப்பதை முன்னிட்டு வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் சமூகவலைதளபக்கமான எக்ஸ் தளத்தில்  #45yearsofvanniyarsangam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம்  44 ஆண்டுகளை நிறைவு செய்து 45 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை முன்னிட்டு மருத்துவர்  ராமதாஸ் அவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வன்னியர் சங்கத்தின் கோடியை ஏற்றிவைத்தார்.

பின்னர், வன்னிய சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், வன்னியர் சங்கம் சார்பில் 1987ஆம் ஆண்டு உலகமே வியந்துபார்க்கும் அளவிற்கு 7 நாள் சாலை மறியல் போராட்டம் குறித்து வன்னியர் சங்கம் சமூகநீதிக்காக நடத்திய போராட்டங்கள் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்த சாதனைகளை குறித்து வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் சமூகவலைதளபக்கமான எக்ஸ் தளத்தில்  #45yearsofvanniyarsangam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trending hashtag 45 years of vanniyar sangam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->