''எக்ஸ்'' வலைத்தளம் மூலம் ஆடியோ, வீடியோ அழைப்பு: ஆனால்...! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் எனப்படும் எக்ஸ் வலைதளம் மூலம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பை ப்ரீமியம் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பிரீமியர் பயனர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியும். மற்ற பயனர்கள் அழைப்பை பெற முடியும். 

ஆனால் மற்ற பயனர்கள் அழைப்பு விடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் பயனர்களாக இருப்பவர்கள் எக்ஸ் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவை மூலம் எக்ஸ் வலைதளத்தில் பிரீமியம் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்னதாக ஐ ஓ எஸ் பயனர்களுக்கு இந்த வசதி வந்துவிட்ட நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வசதி விரைவு படுத்தப்பட்டுள்ளது. 

முகநூல் மெசேஜர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்வது போல தற்போது எக்ஸ் வலைதளம் மூலமும் அழைப்பை மேற்கொள்ள முடியும். இதே போல் அனைத்து வசதிகளையும் எக்ஸ் வலைதளம் பெறும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

X website through Audio video calling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->