2022 ஆங்கில வருடம் : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது? - Seithipunal
Seithipunal


திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அதையடுத்து தனது தலைமுறையை வாழையடி வாழையாக தழைக்கும் சந்ததிகள் வருவதற்கு புத்திர பாக்கியம் மிகவும் அவசியமாகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.

மேஷம் : 

புத்திர ஸ்தான அதிபதி வலுவாக அமையப்பெற்று இருப்பதினால் புதிதாக குழந்தைப்பேறு உண்டாகும்.

கடகம் : 

 சுபர் பார்வை புத்திர ஸ்தானத்திற்கு சாதகமாக இருப்பதால் தடைகள் நீங்கி குழந்தை செல்வம் கிடைக்கும்.

சிம்மம் : 

 பிள்ளைகளை பற்றிய குறை, கவலை, சஞ்சலம் எல்லாம் இனி விலகிவிடும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

கன்னி : 

 கருவில் வளர்கின்ற குழந்தைகளின் முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு : 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கருவில் வளர்கின்ற பிள்ளைகளுடைய ஆரோக்கியமும், கல்வியும் சிறப்பாக இருக்கும்.

மகரம் : 

 குழந்தைப்பேறு தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி நல்ல செய்திகள் கிடைக்கப்பெற்று சுபகாரியங்கள் நடைபெறும்.

மேலும் கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 baby confirm Rasipalankal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->