பித்ரு சாபம் மற்றும் திருமணத் தடை நீக்கும் 'ஆடிக் கிருத்திகை' விரதம் பற்றி தெரிந்து கொள்வோமா..?!
Aadi Kiruthigai Procedure and Benefits
ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினம் தான் 'ஆடிக் கிருத்திகை' என்று அழைக்கப் படுகிறது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
ஆடி கிருத்திகை என்றால் என்ன?
சிவ பெருமானின் அருளால் உருவான முருகப் பெருமானை, 6 காத்திகைப் பெண்கள் தான் வளர்த்தனர். அந்த 6 பேரும் இணைந்து தான் கார்த்திகை நட்சத்திரம் உருவானதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விதமாகத் தான் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்ளப் பட்டது. ஆண்டுக்கு இரண்டு கிருத்திகைகள் உள்ளன. அதில் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.
விரதம் இருக்கும் முறை :
இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை ஜூலை 29ம் தேதி வருகிறது. அன்று அதிகாலையில் நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து, முருகப் பெருமான் படத்திற்கு முன் அரிசி மாவால் ஆறு கோணம் வரும் கோலம் போட்டுக் கொள்ளவேண்டும். படத்திற்கு இருபுறமும் நெய் தீபம் ஏற்றி பூக்கள் மற்றும் பழங்களை படைக்க வேண்டும். அன்று மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல், வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் விரதமிருக்க விரும்பினால் உப்பில்லாத உணவுகளை உண்ணலாம்.
பலன்கள் :
ஆடிக் கிருத்திகை விரதம் கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், நாகதோஷம், திருமணத் தடைகள் நீக்கும். மற்றும் குழந்தை பாக்கியம் அருளும்.
English Summary
Aadi Kiruthigai Procedure and Benefits