ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை ஏன் சிறப்பு பெறுகிறது?
Aadi month Sunday Special
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு :
ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மனுக்கு கூழ்வார்த்தல் பண்டிகை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆடி மாதம் வரக்கூடிய எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா கோவில்களிலும், வீடுகளிலும் பெரும்பாலும் விமர்சையாக நடத்தப்படும்.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக வீடுகளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அம்மனை வழிபாடு செய்து அருளை பெறலாம். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.
அம்மன் ஆடி வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமையன்றும் அம்மன் எழுந்தருளுகிறாள். ஆம், ஞாயிற்றுக்கிழமையன்று வீடுகளில் கூழ்வார்த்து வீதி முழுவதும் வசிக்கும் மக்களுக்கும், வீதியில் செல்பவருக்கும் கூழ்வார்த்து அம்மன் அருளைப் பெறுகிறார்கள்.
ஆடி ஞாயிற்றுக்கிழமையன்று கூழ் ஊற்றி அம்மனை வணங்குவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
கன்னி தெய்வ வழிபாடு :
ஆடி ஞாயிறு என்றால் அது கன்னி தெய்வத்தை வழிபட கூடிய நாள். ஆடி மாதம் வரக்கூடிய ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில், அந்த வீட்டினுடைய கன்னி தெய்வத்தை மனதார நினைத்து பூஜை செய்வார்கள்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண், இயற்கையான முறையில் மரணம் அடையாமல், அந்தப் பெண்ணினுடைய ஆயுசு முடிவதற்கு முன்பாகவே இறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்த பெண்ணை தான், அந்த குடும்பத்தினுடைய கன்னி தெய்வமாக நினைத்து வழிபாடு செய்வார்கள்.
ஒரு குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டுமென்றால் அந்த குடும்பத்திற்கு கன்னி தெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியம். உங்களுடைய வீட்டிலும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இப்படி யாராவது இறந்திருந்தால் அந்த தெய்வத்தை மனதார நினைத்து இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.
English Summary
Aadi month Sunday Special