ஆடித்தபசு திருவிழா - சங்கரநாராயணசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆடித்தபசு திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். 

அதன் படி இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று காலை அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. 

மாலை 6 மணியளவில் தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த ஆடித்தபசு திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adithabasu festival devotees sami dharisanam in sangaranarayanan temple


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->