ஆனித் திருவிழா "நெல்லையப்பர் கோயிலில் ,விநாயகர் கொடியேற்றம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் நடக்கவிருக்கும் ஆனித் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் இந்த நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. ஆண்டுதோறும் ஆனித்திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

வருகின்ற ஜூலை 22ஆம் தேதி ஆனி தேரோட்டம் நடக்கவிருப்பதை முன்னிட்டு சுவாமி சன்னதி முன் விநாயகர் கோயில் கொடியேற்றம் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. இரவு நடந்த விநாயகர் சப்பர பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடிமரத்திற்க்கு சிறப்பு ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது.

கோயில் நிர்வாகம் மற்றும் ஏராளமான பக்தர்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anith Festival Ganesha Flag Hoisting at Nellayapar Temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->