திருப்பதியில் தொடங்குகிறது வருடாந்திர தெப்போற்சவம் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருமலை - திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து இருப்பதாவது:- "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 

அதைமுன்னிட்டு முதல் நாளான நாளை இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் தெப்பத்தேரில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

* 2-வது நாள் உற்சவர்கள் சத்தியபாமா, ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 3-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 4-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 5-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தெப்போற்சவத்தால் 20, 21-ந்தேதிகளில் சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annual theppotsavam in tirupati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->