அஷ்டமி, நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன பலன்?
Ashtami Navami benefits in tamil
கோபியர் கொஞ்சம் கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி தினத்தை கோகுலாஷ்டமி என அழைக்கிறோம். ராமர் பிறந்த நவமி தினத்தை ராம நவமி என அழைக்கிறோம். அஷ்டமி நவமி தினத்தில் ஏன் சுப காரியங்களை தள்ளி வைக்கிறோம் என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. அஷ்டமி தினத்தில் செய்யப்படும் யாகம், பூஜை, ஓமம், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு 8 லட்சுமிகளும் அருள் கொடுக்க முடியாதாம்.
அஷ்டலட்சுமி அருள் இல்லாமல் சுப காரியங்கள் சிறக்காது. இதனால் அஷ்டமி நவமி நாட்களில் சுப காரியங்கள் தவிர்க்கப்படுகிறது. அஷ்டமி நவமி நாட்களில் செய்யும் காரியங்கள் இலுப்பறையில் முடியும். அஷ்டமி நவமி திதிகளில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.
நவமியில் உயிர் பலி கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம். அஷ்டமி திதி நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் பைரவரை வழிபட்டால் துன்பங்கள் நீங்கிவிடும். அன்னை சரஸ்வதி தேவியை நினைத்து வணங்கினால் நினைத்த காரியங்கள் நடைபெறும்.
அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாடு நாள். வளர்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபடலாம். காலபைரவரை வழிபடும் பொழுது தலைகுனியா வாழ்க்கை வாழ முடியும். வளர்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பஞ்ச தீபம் ஏற்று வழிபட்டால் தீர்க்க முடியாத துன்பங்கள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் போன்றவற்றில் தீபம் ஏற்றி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கினால் காலத்தினால் தீர்க்க முடியாத துன்பங்களும் நீங்கும்.
நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த காலம் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும். நவமி திதியில் தடைகள் விலகி லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். ராமநவமி விரதம் இருந்து ராமரை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசியும் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
நவமி திதியில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். பழி வாங்குவது பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் எழும். அன்றைய நாட்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
English Summary
Ashtami Navami benefits in tamil