அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது; செயலர் சம்பத் ராய்..!
Ayodhya Ram Temple Trust has paid Rs400 crore in taxes Secretary Sampath Rai
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கடந்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி மகா கும்பாபிஷேம் நடைபெற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், மத சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த0 5 ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையானது பிப்ரவரி 05, 2020 முதல் பிப்ரவரி 05, 2025 வரை செலுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இதில் ரூ.270 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.130 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது என்றும் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அயோத்தி ஒரு முக்கிய மத சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது. அத்துடன், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரக்யராஜ் இல் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் அயோத்திக்கு 16 கோடி பேர் வருகை தந்தனர் என்றும், அதில் 05 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை தந்தனர் என் அக்குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Ayodhya Ram Temple Trust has paid Rs400 crore in taxes Secretary Sampath Rai