சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது ஏன்? தெரிந்து கொள்ளலாம் வாங்க.!! - Seithipunal
Seithipunal


நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்குக் கற்பிக்கப்பட்ட காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை.

எவ்வளவோ மரங்கள் இருந்தும், வீட்டில் நிகழும் சுபநிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்? நமது வீட்டில் நிகழும் சுபகாரியங்களுக்கு அடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். அதுவும் பூ பூத்து, காய் காய்த்த வாழை மரத்தைத் தான் தேர்ந்தெடுத்துக் கட்டுவோம்.

அந்த காலத்தில் திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. 

குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்றுவிட்ட வாழைமரத்தின் நிலை. திருமண வீடுகளில் வாழையடி வாழையாக மணமக்கள் வாழவேண்டும் என்ற மரபிலே வாழைமரம் கட்டுகிறார்கள்.

சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்?

தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.

வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள், போவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விடும் மூச்சு காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும்.

அத்துடன் கூட்டம் அதிகப்படியாகச் சேரும்போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும்போது ஒருவிதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்போது வீட்டில் கட்டியிருக்கும் மாவிலை தோரணங்களும், வாழை மரங்களும் ஒன்று சேர்ந்து காற்றில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது வாழை மரம்.

மேலும், வீட்டில் விசேஷம், நல்ல காரியங்கள் நடைபெறும்போது வீட்டிற்கு எந்தவித கண் திருஷ்டியும் அண்டாமல் நம்மைப் பாதுகாக்கும் என்பதற்காகவும் வாழை மரத்தை வாசலில் கட்டுகிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banana tress in marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->