சித்ரா பவுர்ணமி நாளில் என்னென்ன வழிபாடு செய்யலாம்? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிலும், தமிழ் வருடத்தில் முதல் மாதமான சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒன்றினையும் நாளே சித்ரா பௌர்ணமி ஆகும். இது சித்திரப்பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினம், சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும். 

இப்படி பல சிறப்புகள் நடக்கும் இந்த சித்ரா பௌர்ணமி நாளை, ஏப்ரல் 23, 2024- சித்திரை பத்தாம் நாள் வர உள்ளது. இந்த நாளில் நம் வழிபாடுகளை செய்வதால் மன கவலை நீங்கி, மன ஆரோக்கியம் பெருகும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், செல்வம் விருத்தியாகும். இந்த நாளில் என்னென்ன வழிபாடு செய்யலாம் என்று இந்தப் பதிவில் காண்போம்.

சித்ரா பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபாடு செய்து கிரிவலம் செய்ய உகந்த நாளாகும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்யவும் உகந்த நாள். கடற்கரை, ஆற்றங்கரையில் உள்ள இறைவனை வழிபாடு செய்து அன்று இரவு சந்திர ஒளி நம் மீது படும் படி இருக்கவும். தியானம் மேற்கொள்வது சிறப்பாகும்.

இந்த நாளில் தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெறும். ஆகவே மனோகாரரான சந்திரன் வலுப்பெற்ற தினமாக இந்த நாளில் நாம் வழிபாடு செய்தால் நம் மனக் கவலை, மனக்குழப்பங்கள் நீங்கும். நன்மை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chithra pournami swami dharisanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->