ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் ரத்து! - Seithipunal
Seithipunal


தீபாவளிக்கு மறுநாள் 25ஆம் தேதி சூரிய கிரகணம் வருவதால் ராமநாதசுவாமி கோயில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வர ராமநாதசுவாமி கோயில் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 ஆம் தேதி காலை வழக்கம் போல் 4:30 மணிக்கு நடைபெறும் ஸ்படிக லிங்க தரிசனம் மற்றும் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும். பிற்பகல் ஒரு மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்படும்.

பின்னர் மாலை 4 மணிக்கு தீர்த்த வாரிசுவாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி பூஜை நடைபெற்று ரதத்தில் வீதி உலா வந்த பின்னர் மீண்டும் மாலை 6:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கிரக அபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

இதன் காரணமாக அன்றைய தினம் பகல் 1:00 மணியிலிருந்து மாலை 6:30 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் தீர்த்த கிணற்றில் நீராடவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அதிகாலை 5 மணி முதல் ஒரு மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Darshan at Ramanathaswamy Temple canceled due to solar eclipse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->