பரபரப்பு!நெல்லையில் அம்மன் சிலை கண் திறந்ததை பார்த்த பக்தர்...!!! - வைரலாகும் புகைப்படம்...!!!
Devotee sees Amman idol open eyes Nellai Viral photo
நெல்லையில் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகிலுள்ள தெற்கு தெருவில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.அந்தக் கோவிலில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிச்சென்றுள்ளார்.

அதன் பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர், சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டுள்ளார்.அந்த நேரம் அம்மன் சிலையின் கண் திறந்து இருப்பதை பக்தர் பார்த்துள்ளார்.
அதைக்கண்ட பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்துள்ளார்.
இது உடனே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தச் செய்தி தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Devotee sees Amman idol open eyes Nellai Viral photo