பங்குனி உத்திரம் - முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!
devotees croud increase in murugan temple for panguni uthiram
ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் அதிகாலையில் இருந்தே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதேபோல், அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. அதிகாலை முதலே குவிந்த திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
English Summary
devotees croud increase in murugan temple for panguni uthiram