அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - திருநள்ளார் சனிபகவான் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதி உள்ளது. இந்தக் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். 

இந்த நிலையில், ஆடி மாத முதல் சனிக்கிழமையான இன்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர்.

சுமார் 4மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இதைத் தொடர்ந்து பக்தர்கள் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றியும் அன்னதானம் செய்தும் வழிபட்டனர். பக்தர்களின் வருகையால் திருநள்ளார் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees cround increase in thirunallar sanibagavan temple


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->