காரைக்கால் : பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா - திருக்கல்யாண வைபவம்.. திரண்டு வந்து கண்டு களித்த பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


சிவனடியாராக இருந்து இறைவனுக்கு இணையாக போற்றப்படுபவர் தான் காரைக்கால் அம்மையார். சிவ பெருமானே இவரை அம்மையே என்று அழைத்ததால் தான் இவர் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படுவாதாக புராணங்களில் உண்டு. முன்னதாக காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி என்பது குறிப்பிடத்தக்கது.

63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றுள்ள காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனித் திருவிழா வெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 19ம் தேதியான நேற்று மாலை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக மாப்பிள்ளை அழைப்பாக அழைத்து வரும் நிகழ்வுடன் நேற்று இந்த திருவிழா தொடங்கியது. 

தொடர்ந்து இன்று ஜூன் 20ம் தேதி காலை காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து திருக்குளத்திற்கு எழுந்தருளிய அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் இன்று காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

மேலும் கோவிலுக்கு வெளியே உள்ள பக்தர்கள் இந்த திருக்கல்யாணத்தை டிஜிட்டல் திரையில் கண்டு களிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த வைபவத்திற்கு பிறகு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கனி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தாம்பூல பையை பிரசாதமாக கோவில் நிர்வாகத்தினர் அளித்தனர்.

இதையடுத்து இந்த திருவிழாவின் சிறப்பு மிக்க நிகழ்வான மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees Were Amused in Karaikal Mangani Festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->