எந்த நிலையிலும் சிவனுக்கு படைக்க கூடாத பொருட்கள் இவை தான்.!
do not pooja with these to lord shiva
சிவன் என்பவர் முற்றும் துறந்த எளிமையான யோகி, ஞானி. எனவே, அவரது கோவிலுக்கு செல்லும் பொழுது எதையும் எடுத்துச் செல்லக்கூடாது. சிவன் சொத்து குல நாசம் என்று கூறுவார்கள். சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சிவ புராணம் தெரிவிக்கின்றது. அதன் அடிப்படையில் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு படைக்கவே கூடாது.
தாழம்பூ: பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஒருமுறை யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது சிவன் ஜோதி லிங்கமாய் தோன்றி தன்னுடைய முதலான தலையை அல்லது முடிவான காலை பிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறியிருக்கின்றார். பிரம்மா தலையை நோக்கியும், விஷ்ணு காலை நோக்கியும் தேடிச் சென்ற பொழுது ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதில் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால் பிரம்மா தான் காலை பார்த்ததாக சாட்சி தாழம்பூ ஒன்றை கொண்டு வருகின்றார். எனவே, கோபத்தில் சிவன் பிரம்மாவின் நான்காவது தலையை துண்டித்துவிட்டு தாழம்பூவை தனக்கு எப்போதும் படைக்கக் கூடாது. என்ற அளவிற்கு சாபம் விடுத்ததாக சிவ புராணம் தெரிவிக்கின்றது. எனவே, தாழம்பூவின்-ஆல் சிவனுக்கு பூஜை செய்வது கிடையாது.
துளசி: எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடம் இருந்து ஜலந்தர் என்ற அசுரன் வெற்றி இருக்கின்றான். அவனுடைய அராஜகத்தை தாங்க முடியாத சிவன் அவனை கொன்று சாம்பலாகி இருக்கின்றார். இதன் காரணமாக கோபமடைந்த அசுரனின் மனைவி துளசி தனது தெய்வீக மலர்களின் மூலமாக சிவனை மறைய செய்கின்றாள். எனவே தான் துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.
தேங்காய் நீர்: சிவனுக்கு படைக்கும் எந்த பிரசாதத்தையும் நாம் சாப்பிடக்கூடாது .பொதுவாக தேங்காயை கடவுளுக்கு படைக்கும் அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தேங்காயில் இருக்கும் நீரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மஞ்சள்,குங்குமம்: இது போல மஞ்சள் குங்குமத்தையும் படைக்கக் கூடாது என்று சிவபுராணத்தில் கூறப்படுகிறது.
English Summary
do not pooja with these to lord shiva