ஆடி மாதத்தில் அம்மனுக்கு 'கூழ்' ஊற்றுவது ஏன் தெரியுமா?! - Seithipunal
Seithipunal



தமிழ் மாதங்களில் 4 ஆவதாக இருக்கும் மாதம் தான் ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் மிகவும் விசேஷமாக இருக்கும். அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஆடி மாதம் முழுக்க ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடிப் பூரம் என்று ஒவ்வொரு நாளுமே விசேஷமான நாளாகத் தான் இருக்கும். 

மேலும் இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது, பூ மிதிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் செய்வார்கள். அதில் அம்மனுக்கு ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது குறித்து நாம் தெரிந்து கொள்வோம். 

ஆடி மாதத்தில் காற்றும், மழையும் மிகவும் பலமாக இருக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் பல்வேறு தொற்று நோய்கள் நம்மைத் தாக்கும். இதன் காரணமாகத் தான் ஆடி மாத அம்மன் வழிபாட்டில் வேப்பிலை மற்றும் மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. 

முக்கியமாக ஆடி மாதங்களில் அம்மன் கோவில்களில் பிரசாதமாக கூழ் வழங்கப்படுவதுண்டு. ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்பநிலை காரணமாக நமக்கு ஏற்படும் பல்வேறு தொற்றுக்களில் இருந்து இந்த கூழ் நம்மை பாதுகாக்கும். 

வெயில் காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிப்பதால் ஆடி மாதம் பெய்யும் மழை சூட்டைக் கிளப்பக் கூடியதாக இருக்கும். எனவே கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியவற்றில் தயாரிக்கப் படும் இந்த கூழானது உடலின் வெப்பத்தை தணித்துக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Know The Reason For Koozh Offering in Amman Temples in Aadi Month


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->