எந்த நாளில் குலதெய்வத்தை வணங்க வேண்டும்? - Seithipunal
Seithipunal


குலதெய்வ கோவிலில் எந்த நாளில் வழிபாடு செய்தால் நல்லது. என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். பௌர்ணமி நாளில் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மிகச் சிறப்பு. அதேபோல் வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது. 

ஒவ்வொரு பெளர்ணமி நாளிலும் மாலை நேரத்தில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது.
பெளர்ணமி நாளில், குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், வழிபட்டு வருவது நன்மைகளை அளிக்கும். 

சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். குலதெய்வம் பூர்வீகக் கிராமத்திலோ அல்லது வெளியூரிலோ இருந்தால், ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாளில், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம்.

குலசாமி படத்துக்கு மாலை அணிவித்து அல்லது பூக்களால் அலங்கரித்து குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் செய்து குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து வேண்டிக்கொள்ளலாம். இதனை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கினால் மிகவும் நல்லது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family god pray time and day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->