இன்று எந்த ராசிக்கு சந்திராஷ்டமம்?... தெரிஞ்சுக்கலாம் வாங்க.!!
feb 15 rasipalan
மேஷம்:
ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.
ரிஷபம்:
எதிர்பாராத உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.
மிதுனம்:
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
கடகம்:
உறவினர்களிடம் உள்ள உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம்:
புதிய வேலைதேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சவாலான வாய்ப்புகள் ஏற்படும்.
கன்னி:
கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
துலாம்:
தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.
விருச்சகம்:
வாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
தனுசு:
நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.
மகரம்:
இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் இலாபம் உண்டாகும்.
கும்பம்:
கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தந்தைவழி உறவுகளின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஏற்றுமதி தொடர்பான தொழில்களில் எண்ணிய இலாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும்.
மீனம்:
எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சுயதொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.