குடும்பத்தில் கடன் தொல்லையா? - எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்.!
god of lakshmi
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை முழுமனதுடன் பிரார்த்தனை செய்து வேண்டி வந்தால் அம்மனின் முழு அருளும் நம் மீது விழும் என்பது மக்களின் அழியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமை அன்று வேண்டி பரிகாரம் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி பலரும் பலனடைந்து வருகின்றனர். லட்சுமி தேவிக்கு என்னென்ன பரிகாரங்கள் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை குறித்து பார்க்கலாம்? "லட்சுமி தேவிக்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் பிடித்தமான நிறமாகும். அதனால், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மாலை வாங்கி வெள்ளிக்கிழமை அன்று அணிவித்து லட்சுமி தேவியை வேண்டி வர வேண்டும்.
மேலும், வீட்டில் சுத்தமான நெய் தீபம் ஏற்றி லட்சுமி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். லட்சுமி தேவியை தரிசிக்கும் போது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து தரிசிக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
இவ்வாறு, லட்சுமி தேவியை தரிசித்து பரிகாரம் செய்து வந்தால் வீட்டில் நன்மைகள் நிகழும். பாவங்கள் விலகி மகிழ்ச்சி பெருகும், நோய் நொடிகள் தீரும், கடன் தொல்லை நீங்கும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.