குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சில அதிஷ்டம் ஏற்படும்.!! - Seithipunal
Seithipunal


மங்களகரமான பிலவ வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் (13.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மங்களகரமான பிலவ வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 4ஆம் (20.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குரு பார்வை படும் ராசிகள் :

குரு தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டு மேன்மையை உருவாக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே...

இந்த வருடம் குரு உங்களுடைய ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்து சகோதர ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.

பலன்கள் :

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் தொடர்புகளின் மூலம் செல்வாக்கும், செல்வமும் மேம்படும்.

பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். ஆரோக்கியம் நிமிர்த்தமான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தெளிவான பாதைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சிலருக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் எதிர்பார்த்திருந்த அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு ஏற்படும். உதிரி பாகம் தொடர்பான விற்பனையாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த விவாதங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் அது நிமிர்த்தமான அறிமுகங்களும் கிடைக்கக்கூடிய காலக்கட்டங்கள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த விவாதங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்களுக்கு :

பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் திறமைகள் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் செயலாற்றுவீர்கள்.

மாணவர்களுக்கு :

சிலருக்கு தடைபட்ட உயர்கல்வியை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் கிடைக்கும். உயர்கல்வியில் புலமையும், முன்னேற்றமான வாய்ப்புகளும் உண்டாகும்.

நன்மைகள் :

இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு மனதில் நினைத்திருந்த ஆசைகளையும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பையும், செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடிய நல்ல காலமாக அமையும்.

வழிபாடு :

திருச்செந்தூரில் குடிக்கொண்டு இருக்கும் முருகப்பெருமானை மனதார செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்துவர சுபிட்சமான சூழல் ஏற்படும்.✳ மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே... அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

guru peyarchi 2021 to 2022 in dhanusu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->