காசா நிலைதான் பாகிஸ்தானுக்கும்... எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கரவாதச் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் நிலவத் தொடங்கியுள்ளது.

இந்த கொடூர தாக்குதலை கண்டித்து, பாஜக சார்பில் டெல்லியில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி, "எங்கள்மீது ஹமாஸ் போல தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேல் மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைகளைப் போல கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிரிகளை கனவிலும் நெருடும் அளவுக்கு தண்டனை வழங்கப்படும்" எனக் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளையின்படி இது செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் தற்போது காசா பகுதியின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களை எடுத்துக்காட்டாக கூறிய பிதுரியின் இந்த பேச்சு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kashmir Terrorist Attack BJP Delhi leader warn


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->