யாரோ 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை சொல்ல முடியாது....! - விஜய் ஆண்டனி
You cant blame entire Pakistan mistakes 4 people Vijay Antony
கடந்த 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தினர் .

இதில் 26 பேர் பரிதாபமாகக் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் திடீர் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதே சமயம் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனி:
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான 'விஜய் ஆண்டனி' அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது நிருபர்கள் சந்திப்பின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதாவது, "பாகிஸ்தானிலுள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
English Summary
You cant blame entire Pakistan mistakes 4 people Vijay Antony