திருவாதிரை விரதம் எப்படி இருக்க வேண்டும்? யார் எடுக்க வேண்டும்?
how to pray thiruvathirai fasting
தமிழ் மாதங்களில் ஒன்றான மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதமாகும். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த சிறப்பு மிகுந்த நாளாகும். அன்றைய தினம் திருமணமான பெண்கள் மாங்கல்ய நோன்பு இருப்பர். அப்படி விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?
புதிதாக திருமணமான பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்து, உறவினர்களையும் அழைத்து திருவாதிரை விரதம் இருந்து பூஜை செய்து தாலி சரடு மாற்றுவார்கள். நோன்பிருக்கும் பெண்கள் திருவாதிரை அன்று அதிகாலை 5 மணிக்கு பட்டினி சோறு உண்டு ஆரம்பிப்பார்.
பகல் முடிந்து இரவு வந்ததும் பூஜைகள் ஆரம்பமாகும். திருவாதிரைக்கு பிரசித்தி பெற்ற களி, 18 வகை காய்கறி கூட்டு மற்றும் பச்சரிசி அடை அனைத்தும் நெய்வேத்தியமாக வைத்து படைத்து, சந்திரனை வழிபட்டு விரதம் முடிப்பர்.
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் தாலியை கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது உத்தமம். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் பெருகி ஒற்றுமை நிலைக்கும் என்பது வழக்கம்.
English Summary
how to pray thiruvathirai fasting