அடமானத்திற்கு போன நகையை, சீக்கிரம் மீட்க இதை செய்தால் போதும்.!
How To Recover Jewels fast Tips
நாம் அனைவருக்குமே நாம் உடலில் அணிந்திருக்கும் தங்கம், வெள்ளி போன்றவற்றை கழட்ட வேண்டிய நிலை ஏற்படும். நமது நகை சேதாரம் ஆகிவிட்டாலோ அல்லது பணகஷ்டம் ஏற்பட்டு அடகு வைக்கும் நிலைமையோ ஏற்படலாம்.
இது மிகவும் யதார்த்தமாக நிகழக்கூடிய விஷயம்தான். அப்படி எந்த சூழலில் உங்கள் உடலிலிருந்து நகையை கழட்டி வைப்பதாக இருந்தாலும் அந்த நகையை கழட்டும் முன்பு கட்டாயம் இதை செய்யுங்கள்.
நகையை கழட்டிய பின் ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் 11 ரூபாயை வைத்து முடிந்து கொள்ள வேண்டும். பின்னர், கழட்டிய நகையை என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம்.
அடமானம் வைத்தாலும் அல்லது புதிய நகை வாங்க இதை மாற்றினாலும் சரிதான். குலதெய்வத்தை நினைத்து நீங்கள் முடிந்து வைத்துள்ள ரூபாயை எடுத்துக் கொண்டு குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அதை உண்டியலில் செலுத்த வேண்டும்.
இப்படி செய்தால் நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற நகை விரைவில் வந்து சேர குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். அடமானத்திற்கு சென்று இருந்தாலும் அந்த நகையை சீக்கிரமாக மீட்டெடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அப்படி வீட்டிற்கு வெளியில் சென்ற நகை மீண்டும் வீட்டிற்கு வந்தவுடன் அதை அப்படியே அணிந்து கொள்ளக் கூடாது. மஞ்சள் தண்ணீரில் கழுவி அதை பன்னீரில் போட்டு வைத்துவிட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவி பூஜையறையில் இருக்கும் சாமி படத்திற்கு போட வேண்டும்.
சிறிது நேரம் சாமிக்கு நகையை அணிந்து விட்டு, அதை எடுத்து நாம் அணிந்து கொள்ளலாம். அனைத்து பரிகாரங்களும் எல்லோருக்கும் பலன் கொடுக்குமா? என்றால் கேள்வி குறிதான். ஆனால், நம்பிக்கையுடன் நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் உங்களுக்கு கட்டாயம் பலனை கொடுக்கும்.
English Summary
How To Recover Jewels fast Tips