ராகு, கேதுவால் ஏற்படும் சிக்கலில் இருந்து தப்பிக்க எளிய வழி.! - Seithipunal
Seithipunal


ராகுவோட அமைப்பு சரியில்லை என்றால், கல்யாணமாலை கழுத்தில் விழுவதில் தாமதம், சந்தான பாக்கியம் கிட்டுவதில் தடை, சிற்றின்ப நாட்டம் அதிகரிப்பு, பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும்.

இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க சில வழிகள் உள்ளன. அவை சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள்.தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்க. எலுமிச்சை தீபம் கூடாது.

3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறுபிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒருமுறையாவது, பட்டீஸ்வரம் சென்று துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்துவிட்டு வாருங்கள். இயன்றபோதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்து சாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதிகளில் வழிபாடு செய்யுங்கள். வசதி உள்ளவர்கள் கோமேதகக் கல் டாலர் அணியுங்கள் அல்லது கோமேதக கணபதியை கும்பிடுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.

கேது தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள்;செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றிவைத்து இஷ்ட தெய்வத்தை கும்பிடுங்கள். விநாயகர் கோவிலுக்குப்போய் அறுகம்புல் சாத்தி வழிபடுங்கள். பக்தர்களுக்கு இயன்ற அளவு கதம்ப சாதத்தை விநியோகம் செய்யுங்கள். துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்துகொள்வது சிறப்பானது.

வருடத்திற்கு ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அவரது அபிஷேக விபூதியை வாங்கிவந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரியசித்தி மாலை துதியை எப்போதும் சொல்லுங்கள். வசதி உள்ளவர்கள் கோமேதகக் கல்லை டாலரில் பதித்து அணியுங்கள். அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜியுங்கள். காளஹஸ்தி கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய தலங்களுக்குச் சென்று இறைவன் இறைவியை தரிசிப்பதோடு கேது கிரகத்தையும் வணங்குங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to skip Ragu, kethu issues


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->