கோவிலில் தரும் மாலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? - Seithipunal
Seithipunal


பொதுவாக கோவிலுக்கு சென்றால் பூ, பழம், தேங்காய், மாலை உள்ளிட்ட பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். இந்தப் பொருட்களை, அப்போது மட்டும் பக்தியுடன் வாங்கி வந்து விட்டு, வீட்டில் அலட்சியமாக வைக்கக் கூடாது. இறைவனுக்கு சமர்பிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் இறைவன் சன்னதியில் இருந்து பிரசாதமாக கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமே தெய்வீக தன்மை வாய்ந்தது. 

அதனால், கோவிலில் கொடுக்கப்படும் பூக்கள், உதிரிப்பூக்களாக இருந்தால் அவற்றை தொடுத்து, பெண்களாக இருந்தால் தலையில் வைத்துக் கொள்ளலாம். ஆண்களாக இருந்தால், வீட்டின் பூஜை அறையில் வைத்து விடலாம். இதேபோல், சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலையை பிரசாதமாக கொடுக்கிறார்கள் என்றால், அவற்றை கார், இரு சக்கர வாகனத்திற்கு அணிவிக்கலாம். 

மேலும், கோயிலில் கொடுத்த மாலையை வீட்டில் உள்ள சுவாமிக்கு அணிவிக்கக் கூடாது. இறைவனுக்கு ஒருமுறை சாத்தப்படும் அல்லது சமர்பிக்கப்படும் பொருட்களுக்கு நிர்மால்யம் என்று பெயர். அதாவது, அவை மீண்டும் இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. அப்படி மீண்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்துவது மிகப் பெரிய பாவமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், கோவிலில் தரும் மாலைகளை வீட்டில் உள்ள பூஜை அறையின் நிலை வாசலில் அல்லது வாசல் கதவின் நிலை வாசலில் மாட்டி வைக்கலாம். அவைகள் காய்ந்த பிறகு பூஜை அறை குப்பைகளுடன் சேர்த்து விடலாம். பூஜைக்கு பயன்படுத்த பூ இல்லை என்பவர்கள் பூக்கள் இல்லாமலும் பூஜை செய்யலாம். 

அது என்னவென்றால், வில்வ இலைகளை வாங்கி உலற வைத்து எடுத்துக் கொள்ளலாம். அவற்றை தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு, பூஜைக்கு பயன்படுத்தலாம். வில்வ இலை, நிர்மால்யம் கிடையாது. வில்வ இலையை மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம். அதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. எத்தனை முறை பயன்படுத்தினாலும் அதன் தெய்வீக தன்மை குறையாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to use temple flower in house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->